January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

42 பேருக்கு கொரோனா தொற்று ; தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மூன்று தினங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பொருளாதார மத்திய நிலைய வளாகத்தில் 190 பேருக்கு எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 42 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் வர்த்தகர்கள், அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களும் அடங்குவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.