
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டார் என உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
“ஹரின் பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான சூழலை அமைப்பதற்காக அரசாங்கம் இந்த வெட்கக்கேடான செயலைச் செய்துள்ளது”என்றும் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீன், பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர் என்று சுட்டிக்காட்டிய அவர், 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ரிஷாத் பதியுதீனை அவருடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு சுதந்திரமாக செயல்பட பசில் ராஜபக்ஷ அனுமதித்திருந்தார்.
“ரிஷாத் பதியுதீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ரவூப் ஹக்கீம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை நாங்கள் மறக்கவில்லை.இதனால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஐ நிறைவேற்றியிருந்தது என்பதையும் நாங்கள் மறக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.