
திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய 5 தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால் அந்த பிரிவில் நோயாளர்களை அனுமதிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நோயாளர்களை பார்வையிடுவதற்கும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.