May 31, 2025 1:35:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிகண்டியில் வெடி பொருட்கள் மீட்பு

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் சில பொலிகண்டி பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (சனிக்கிழமை) பொலிகண்டி புதுவளவு என்ற இடத்தில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிபொருட்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படவில்லை எனவும் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.