May 22, 2025 21:41:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

களுத்துறை மாவட்டத்தில் பிரதேசமொன்று முடக்கப்பட்டது!

மேல் மாகாணத்தின் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரதேசத்தின் அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகொட கிராம சேவகர் பிரதேசத்தில் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் நடைமுறை அமுலுக்கு வருகின்றது.

இதேநேரம், குருநாகல் தித்தவெல்கல, நிராவியா மற்றும் நிகதலுபொத்த ஆகிய கிராம சேவகர் பிரதேசங்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.