
கம்பஹா மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) மாற்றப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்துவிட்டு வீடு திரும்பிய இருவரிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர்களில் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருடன் நெருக்கமாக பழகியவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளனர்.