photo-icommunity.lk
இலங்கையின் நகரங்களையும் கடல் வளங்களையும் பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும் திட்டத்துக்காக அமெரிக்கா 345,000 அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் இந்த நிதியை சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜசிங்கவிடம் வழங்கி வைத்தார்.
இலங்கையை சுற்றியுள்ள பரந்த பெருங்கடல்களை பாதுகாக்கவும் நிலையான தீர்வுகளை உருவாக்கவும் இலங்கையர்களுக்கு இந்த நிதி உதவும் என்று அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.