
பாராளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற அமைதியின்மை குறித்து விசாரணை செய்ய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் எழுவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்.
கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், பாராளுமன்ற வளாகத்திலும் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து கண்டறிந்து அதற்கென எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் பொறுப்பு இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.