May 29, 2025 19:32:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர் நீதிமன்றத்தில் ‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனைகள் நிறைவடைந்தன!

உயர் நீதிமன்றத்தில் ‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனைகள் நிறைவடைந்துள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு எதிரான உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 19 மனுக்கள் கடந்த திங்கட்கிழமை முதல் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

நீதியரசர்கள் குழாத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆளும் கட்சி சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த இடையீட்டு மனுக்களும் இதன்போது, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.