
இரசாயன உர இறக்குமதி எதிர்காலத்தில் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘இரசாயன உரங்களின் பயன்பாடு சிறந்த அறுவடைக்கு வழிவகுக்கிறது. ஆனால்,இரசாயன உர பாவனையால் ஏரிகள், கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீர் போன்றன மாசுபடுவதுடன்,அதன் மூலமாக மனிதர்களுக்கு ஏற்படுகின்ற எதிர்மறையான விளைவு இலாபத்தை விட அதிகமாகும்’என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
சிறுநீரக நோய் உட்பட தொற்றா நோய்கள் என பல விளைவுகளை இந்த இரசாயன உர பாவனை ஊடாக மனித சமூகம் அனுபவித்துவருகிறது.
எதிர்காலத்தில் நாட்டில் விவசாயத் துறையில் கரிம உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்,உர இறக்குமதிக்காக ஆண்டொன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவழிக்கப்படுகிறது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.