நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை)விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
கொரோனா எதிர்ப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவிற்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெறவுள்ள இந்த விசேட கலந்துரையாடலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதையடுத்து குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி அறிவித்திருந்தார்.