கொரோனா தொற்றுக்கு உள்ளான யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த பெண் பயணித்த பேருந்தில் பயணித்தவர்களை அடையாளம் காண்பதற்கு சுகாதார துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பிரதேசத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமணைக்கோ தகவலளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுக்குள்ளானோர் பிரதேசத்தில் காணப்படலாம் என்ற அடிப்படையில் வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் அவசர தேவைகள் தவிர்ந்த தேவையற்ற விதத்தில் நடமாடுவதையும் ஒன்றுகூடுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவுப் பெண் சனிக்கிழமை இரவு கொழும்பிலிருந்து பயணித்த பேருந்து புத்தளத்தில் பழுதடைந்துள்ளது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் அவர் அந்த இடத்தில் இருந்து பருத்தித்துறை டிப்போவுக்கு சொந்தமான பேருந்தில் பயணித்து அதிகாலை 4.30 மணியளவில் கொடிகாமத்தில் இறங்கியுள்ளதுடன், அந்தப் பேருந்து அதிகாலை 5 மணிக்கு பருத்தித்துறையை வந்தடைந்துள்ளது. அதில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர்.
இதனால் கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் பணியாற்றிய நடத்துனர் மற்றும் நடத்துனர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்த பேருந்துகளில் பயணித்தோர் உடனடியாக வடமாகாண சுகாதார திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது