
குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தை முடக்குவதற்கு கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் குறித்த பிரதேசம் முடக்கப்படும் என்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டி பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் பீசீஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
தற்போது அந்த மாவட்டத்தில் பீசீஆர் பரிசோதனைகளில் நூற்றுக்கு 10 வீதமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.