February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹட்டனில் விழிப்புணர்வு வேலைத்திட்டம்

 நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுச் சுகாதார அதிகாரிகளினால் பொதுமக்களை தெளிவுப்படுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வீதிகள் மற்றும் பொது இடங்களில் நடமாடும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பேணுதல் வேண்டும் என்றும் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இதேவேளை பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிகள் ஏற்றப்படவேண்டும் எனவும், நாளாந்தம் பஸ்களில் தொற்று நீக்கி தெளிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.