July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சர்வாதிகார’ விமர்சனத்தை பொருட்படுத்தாமல் ஜனாதிபதி இறுக்கமான தீர்மானம் எடுக்க வேண்டும்: வெதருவே உபாலி தேரர்

நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு ‘சர்வாதிகார’ விமர்சனங்களைத் தாண்டி ஜனாதிபதி இறுக்கமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அஸ்கிரிய பீட வெதருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலருக்கும் வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற சுதந்திரம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அளவுக்கு அதிகமான சுதந்திரம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமைந்துள்ளதாகவும், அனைவருக்கும் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை ஒரு நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.