கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் கம்பஹா பொலிஸ் பிரிவுப்ப்க்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மினுவாங்கொட , திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை முதல் கம்பஹா பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு சட்டம் அமுலாகவுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அந்த அறிவித்தலில் பொலிசாரால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றைய பிரதேசங்களிலும் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த பிரதேசங்களில் இன்று மாலை முதல் ஊடரங்கு சட்டம் அமுலாகவுள்ளது.