January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி உட்பட 6 பேருக்கு எதிராக 182 வழக்குகள்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கடுவாபிடிய சென்ட் செபஸ்டியன் தேவாலய குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 6 பேருக்கு எதிராக 182 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வாறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பிரதிவாதிகளிடம் 2 மில்லியன் முதல் 25 மில்லியன் வரை நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் பிரதானி நிலந்த ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இவ்வழக்குகளின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்தும், தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.