சீனா பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியது.
சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இம்மாதம் 27 ஆம் திகதி இலங்கை வருகின்றார்.
இலங்கையில் போர்ட் சிட்டி சட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.