January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாலைதீவு விமான நிலையத்தில் சேவை வாகனம் மோதியதால் ஶ்ரீலங்கன் விமானத்திற்கு சேதம்

Photo: SriLankan Airlines facebook

மாலைதீவின் பிரதான சர்வதேச விமான நிலையமான மாலே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் 116, விமானத்தின் மீது சேவை வாகனம் மோதியதில் விமானத்துக்கு  சேதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் விமானத்தின் பின்பகுதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாலே சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையின் பொறியியலாளர்கள் குழு சேதத்துக்கு உள்ளாகிய விமானத்தின் பின்பகுதியை திருத்தியமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.