மதரஸா பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் நீதிமன்றங்கள் தொடர்பில் அரசாங்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் தீர்மானம் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் என்ன செய்கிறார்கள்? என்ற பிரச்சினை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதரஸா பாடசாலைகளின் பாடத் திட்டம் தொடர்பில் மத விவகார அமைச்சோ, கல்வி அமைச்சோ அறியாத நிலை தொடர்வதாகவும் ரதன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதரஸா பாடசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயிரக் கணக்கான சஹரான்களை உருவாக்கக்கூடிய இடங்களே மதரஸாக்கள் என்றும் அது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.