May 29, 2025 6:25:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக கல்லடியில் நினைவுத் தூபி திறந்து வைப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த 31 பேரின் ஞாபகார்த்தமாக அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுத் தூபி மட்டக்களப்பு கல்லடி பாலம் அருகில் திறந்துவைக்கப்பட்டு, தீபச் சுடர் ஏற்றி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்கிழமை (21)இடம்பெற்றது.

சீயோன் தேவாலயத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நினைவுத் தூபி போதகர் மகேசன் ரொசான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.இதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் சசிநந்தன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி முகுந்தன் நவரூப ரஞ்சினி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு நினைவுத் தூபியில் மலர்வளையம் வைத்து, தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் தேவ அடியார்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.