முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் தேவைப்பட்டால் அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி எம்.பியான சமிந்த விஜேசிறியினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியதாக கைது செய்யப்பட்டு சிஐடி-யினரால் 5 மாதங்களின் பின்னர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர், அவரின் விடுதலையுடன் அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை என்று தெரியவந்தமையினாலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் விடுதலை செய்யப்பட்டார் என்பதற்காக அவர் நிரபராதி என்று கூறிவிட முடியாது. விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி மீண்டும் கைதாகவும் கூடும்.
இதேவேளை விசாரணைகளின் மூலம் மேலும் சிலரும் கைதாகலாம்