January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிப்பு

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மக்கள் ஒன்றுகூடும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

களியாட்ட நிகழ்வுகள் , கூட்டங்கள் , கருத்தரங்குகள் , இசை நிகழ்ச்சிகள் , கண்காட்சிகள் , விழாக்கள் , வைபவங்கள், பேரணிகள் ஆகியவற்றுக்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.