February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் நாட்டு துப்பாக்கி, வெடிபொருட்களுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுண்டிக்குளம் காட்டு பகுதியில் மூவர் வேட்டையில் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடற்படையினர் நடத்திய தேடுதலின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் இறைச்சி என்பவற்றை கடற்படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

This slideshow requires JavaScript.