January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஈஸ்டர் தாக்குதல்; வெளிநாட்டு நன்கொடைகளுக்கு என்ன நடந்தது?”; சோபித தேரர் சிஐடி இல் முறைப்பாடு

ஈஸ்டர் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்காக கிடைக்கப்பெற்ற ஒரு பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நன்கொடை இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என தேசிய புத்திஜீவிகள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, குறித்த பணத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து ஓமல்பே சோபித தேரர் குற்றுப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

2019 இல் ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முன்னணி ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 269 அப்பாவி மக்கள் பலியாகினர்.

இதில் குறைந்தது 500 பேர் காயமடைந்ததுடன், அவர்களில் பலர் நிரந்தரமாக ஊனமுற்றவர்களாக மாறினர்.

அதுமாத்திரமின்றி, ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்களில் 45 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.