November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்”: அஞ்சலி நிகழ்வில் கொழும்புப் பேராயர்

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகளை வெளிக்கொண்டுவந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் வரை எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு வருட நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டுவரப்படுவதில் இருந்தே, உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியைத் தாமதப்படுத்துவது, முழு நாட்டின் பாதுகாப்பையும் ஆபத்தில் விடுவதற்குச் சமமாகும் என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டு வருட நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்படும் நிலையில், தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக எந்த ஒருவருக்கும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.