January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உண்மையையும் பொய்யையும் புரிந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் தயாசிறி கோரிக்கை

உண்மையையும் பொய்யையும் புரிந்துகொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் ஒன்றின் ஊடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றை இரத்துச் செய்யுமாறு அறிவித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றுக்கு பதிலளித்து எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியின் கூட்டம் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படாமை, சூழ்ச்சியானதல்ல என்றும் மனச்சாட்சிக்கு அமைய உண்மையை புரிந்து கொள்ளுமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கட்சியுடன் மீண்டும் இணைந்து செயற்படுமாறும், அதை மிகப் பெரிய கௌரவமாக தான் கருதுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.