யாழ்ப்பாணத்தில் ஆவாக்குழு என்ற குற்றக் கும்பலின் தலைவர் எனக் கூறப்படும் வினோதனின் வீட்டுக்குள் புகுந்து மற்றொரு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இணுவில்துறை வீதியில் உள்ள குறித்த வீட்டுக்குள் புகுந்தவர்கள் பொருட்களை சேதப்படுத்தியுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி ‘தனுரொக்’ என்ற இளைஞன் வாளால் வெட்டி காயப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் ‘ஆவாக்குழு வினோதன்’ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.
இன்றைய தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.