January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக் கடலுக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்வதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும்’: டக்ளஸ்

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, இந்திய மீனவர்களைக் கைது செய்வதே என்று மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே, இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுக்க, தான் கடலுக்குச் செல்லவும் தயாராக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் வளம் அழிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் அனுமதிப் பத்திர அடிப்படையில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட அனுமதிப்பதாக வெளியாகிய செய்தி, உண்மைக்குப் புறம்பானது என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களைக் கைது செய்ய, தான் கடற்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.