இலங்கையை முதலீட்டிற்கான இடமாக கருதுமாறு Boao அங்கத்துவ நாடுகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை முன்வைத்துள்ளார்.
காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக Boao மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி;
சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கை சகல நட்பு நாடுகளுடன் குறிப்பாக ஆசிய வலயத்திலுள்ள அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் அதேவேளை, தெளிவானதும், புதிய தெம்புடனும் கூடிய சர்வதேச கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது.
வலயத்தின் நீண்டகால அபிவிருத்தி அபிலாசைகளை முன்னெடுப்பதை இலக்காகக்கொண்ட பட்டுப்பாதை பிரவேசத்தை வலய நாடுகள் மற்றும் அரச சார்பற்ற செயற்பாட்டளர்களுடன் இணைந்து முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது.
எங்களுடைய =எதிர்பார்ப்பு கடன் பெறுவதல்ல,முதலீட்டை ஊக்குவிப்பதே ஆகும்.
அந்த அடிப்படையில்,சாதகமான வரி விதிப்புகள், வேறு ஊக்குவிப்புகள் உள்ளிட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்ந்திழுக்கும் கொள்கைகளை தயாரித்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தனது உரையின் போது தெரிவித்தார்.