ஆளும் கட்சி தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தாலும் போர்ட் சிட்டி சட்டமூலத்துக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால் நாட்டில் ஒரு சட்ட அமைப்பு உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று ஆசிய மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ள அவர்,ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து நீதிமன்றங்களுக்கு செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.