January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் இன்று காலை முதல் கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய கம்பஹா பொலிஸ் வலயத்திற்கு உட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பு, ஜா-எல, கந்தானை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது.

ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மினுவாங்கொட , திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட பொலிஸ் பிரிவுகளிலும் நேற்று முதல் கம்பஹா பொலிஸ் பிரிவிலும் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் 832 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.