
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே வாள்வெட்டில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு.கௌசிகன் (வயது 31) என்பவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.