
நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வீதிகளிலும், பொது இடங்களிலும் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றாதவர்கள் தொடர்பாக பாதுகாப்புப் பிரிவினர் அவதானம் செலுத்தி வருகின்றனர்.