மே தின கூட்டத்தை தனியாக நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் சாதாரண சம்பிரதாயமாக ஒவ்வொரு முறையும் தனித்தே மே தினத்தை கொண்டாடி வருகின்றோம். அந்த வகையிலேயே இம்முறையும் தனித்து மே தினத்தை கொண்டாட முடிவெடுத்துள்ளோம்.
இந்த மே தினக் கொண்டாட்டத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், அரசாங்கத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம் எனவும், அதற்கான அழைப்பிதழ் விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனைவருக்கும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கான உரிமையிருக்கின்றது. அதற்கமையவே இந்த தீர்மானத்தை எடுத்தோம். எமது கட்சிக்கு கீழ் உள்ள தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்தோம்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொள்வார் எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.