இந்தியாவின் கொச்சி கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது, கொச்சி துறைமுகத்துக்கு அண்மித்த பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘தூ ஷஷீலா’ எனும் இலங்கைப் படகில் இருந்து 340 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த படகை இந்திய கடற்படையினர் கண்காணித்து, சந்தேகத்தின் பேரில் கொச்சின் துறைமுகத்துக்கு கொண்டு சென்று, சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹொரோயின் தொகை, ஈரானைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் இருந்து படகுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஹெரோயின் தொகை இந்திய மதிப்பில் 350 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.