இலங்கையில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர் ஒரு சர்வதேச விபச்சார விடுதியாகவும், கசினோ சூதாட்ட மையமாகவும், அதையும் தாண்டி கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கும் பணச்சலவை மையமாகவே உருவாக்கப்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுக நகர் திட்டத்தின் கீழ் சீன நிறுவனங்களுக்கு வரி சலுகை கொடுப்பதால் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரப்போவதில்லை. முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வர வேண்டும் என்றால் இலங்கையில் நிலையான அரசியல் நிலைமையொன்று காணப்பட வேண்டும்.
இலங்கை அரசியல் பலவீனமான மற்றும் பொருளாதார வீழ்ச்சி கண்டு வருகின்றது.கடன்களை செலுத்த முடியாதுள்ள நாட்டிற்கு முதலீட்டாளர்கள் எவரும் வரப்போவதில்லை.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் முதலீடுகள் கண்டிப்பாக எமக்கு கிடைத்தாக வேண்டும். வலயமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறே உலகில் பல்வேறு நாடுகள் அபிவிருத்தியடைந்துள்ளன.ஆனால் இலங்கையில் இவ்வாறான நிலைமையொன்று இல்லை.
எனவே இந்த திட்டங்களை கொண்டு இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது. இலங்கையை மாற்றியமைக்கும் எந்த நல்ல திட்டமும் இதில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.