நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பல்கலைக்கழகங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் விடுதிகளை ஆரம்பிக்கும் விடயத்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. ஆகையினால் 3ஆம், 4ஆம் வருட மாணவர்களை மட்டும் விடுதிக்குள் உள்வாங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் இரண்டாம் தவணைக்காக ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலைகளுக்கான விடுமுறையை ஒரு வார காலமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.