January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பண்டிகை காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக 349 மில்லியன் ரூபா வருமானம்

பண்டிகை காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக 349 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

வருமானம், போக்குவரத்து விபத்துகள் தொடர்பான அதிவேக நெடுஞ்சாலை வழிநடத்தல் பிரிவின் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கும் போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

கடந்த 11 நாட்களில் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக 1,236,288 வாகனங்கள் பயணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏப்ரல் 10 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 141,187. வாகனங்கள் பயணித்ததுடன், இதன் மூலம் 38 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு பண்டிகை காலத்தில் ஏப்ரல் 10 ஆம் திகதியே அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.