February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

21 ஆம் திகதி கத்தோலிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2 வது ஆண்டு நிறைவு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலியுடன் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

இதையொட்டி அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 21 புதன்கிழமை விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிமுதல் அடுத்த 02 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள சிறப்பு திருப்பலிகளின் போது, தேவாலயங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.