January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி,சூலா பத்மேந்திர ஆகியோர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

திருமதி ஸ்ரீலங்கா அழகி கரோலைன் ஜூரி மற்றும் விளம்பர நடிகை சூலா பத்மேந்திர ஆகிய இருவரும் கொழும்பு பிரதம நீதிவானினால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற திருமதி ஸ்ரீலங்கா அழகி இறுதிப் போட்டியின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இருவரும் கடந்த 8ஆம் திகதி கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி மற்றும் விளம்பர நடிகை சூலா பத்மேந்திர ஆகியோர் இன்று (19) நீதிமன்றில் ஆஜராகிய நிலையில், அவர்கள் இருவரும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.