தொல்லியல் இடங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படவுள்ளன.
இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் இவ்வாறான கருத்தரங்கு தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள தொல்பொருள் இடங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டே, மக்களைத் தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மக்களின் வாழ்விடங்கள், விவசாய நிலங்கள் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டதாகவும், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இடங்கள் பௌத்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த கருத்தரங்கு தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.