இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவின் நியமன ஒப்புதலை தாம் திரும்பப் பெறவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையின் உயர் ஸ்தானிகராக கடந்த வருட இறுதியில் பரிந்துரைக்கப்பட்டவருக்கான ஒப்புதல் அவ்வாறே இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள உயர் ஸ்தானிகராக பெயரிடப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமனம் திரும்பப் பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், இந்தியா அவற்றை மறுத்துள்ளது.
இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் பதவியேற்வு தொடர்பாக இலங்கையின் பக்கத்திலேயே தாமதம் நிலவுவதாகவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூத்த இராஜதந்திரியான மிலிந்த மொரகொட விரைவில் இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகராகப் பதவியேற்க உள்ளதாகவும் தெரியவருகின்றது.