May 28, 2025 13:08:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் வாள், கத்திகளுடன் வீடு புகுந்து இளைஞர் குழு அட்டகாசம்: இருவர் காயம்!

வவுனியா, மகாரம்பைக்குளத்தில் இளைஞர் குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு வாள், கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த குழு அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற போது, அந்தக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர் குழுவினர் பயன்படுத்திய கத்தி ஒன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.