கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நிதி பயங்கரவாதத்திலும் பிரிவினைவாதத்திலும் ஈடுபட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் தெரிவித்தார்.
நாட்டின் குடிமக்களை மூன்றாம் வகுப்பு குடிமக்களாகக் கருத அனுமதிக்கும், மற்றும் நாட்டை வெளிநாட்டு சக்திகளுக்கு அடிமையாக மாற்றும் அரசாங்கத்தின் போர்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோற்கடிக்க உச்சநீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க நடவடிக்கை எடுப்போம்.
நாட்டினுள் பிளவுகளை ஏற்படுத்தும் திட்டத்தையும் அதன் சட்ட கட்டமைப்பையும் நிராகரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தையும் பலத்தையும் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.