January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் 1000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா

மினுவாங்கொட ‘பிரென்டெக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று மாலை வரையில் அங்கு 1034 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

குறித்த பிரதேசங்களிலேயே தொழிற்சாலையின் ஊழியர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இதனால் தொற்று பரவும் அபாயம் நிலவுவதால் அந்த பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வெலிசரவில் உள்ள இன்னுமொரு ஆடைத் தொழிற்சாலையிலும் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த 62 வயதுடைய பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த கொரோனா நோயாளி ஒருவர் அங்கிருந்து நேற்று இரவு தப்பிச்சென்றிருந்தார்.

பின்னர் அவர் இன்று மாலை றாகம பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சிகிக்சையளித்த கம்பஹா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.