July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொட்டகலையில் ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு

ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி நிலையம் என்ற பெயரில் தொழில் அபிவிருத்தி பயிற்சி நிலையம்  கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மலையக இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு கனவையும், மேலதிக படிப்பினையை தொடர்வதற்கும் இந்த பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது, இ.தொ.கா.வின் போசகர் முத்துசிவலிங்கம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதி தலைவர், கட்சி முக்கியஸ்தர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை இங்கு உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,  ‘ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிது சிறிதாக நிறைவேறுகின்றது. இ.தொ.கா இன்று 1000 ரூபாவை பெற்றுக்கொடுத்துள்ளது.இதனை யாரும் நிராகரிக்கவோ, மறுக்கவோ முடியாது.

மேலும்,நுவரெலியா மாவட்டத்திற்கு உரித்தான வகையில் கொட்டகலையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.இதற்கான பணிகள் ஓரிரு ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.