November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்: சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அவதானம் தோன்றி உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகிறார்.

குறிப்பாக மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலைமைகள் மிகவும் மோசமாகியுள்ளதுடன், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.

அத்தோடு இலங்கையில் பி.சி.ஆர் சோதனைகளுக்கான மாதிரிகள் தற்போது எடுக்கப்படுவது குறைந்துள்ளதால் தொற்றாளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் தோன்றி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பி.சி.ஆர் சோதனைகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுமானால் தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அவர் கூறினார்.

தனியார் ஆய்வு கூடங்களில் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகளை வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, நோயாளிகள் வீட்டிலேயே தங்கியுள்ளதாகவும் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இதற்கிடையில், மக்கள் புத்தாண்டின் பின்னர் தொழில்களுக்கு செல்லும்போது சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, ​​அலுவலகத்திலும் அவதானமாக செயற்பட வேண்டும் ,
இல்லையென்றால், எதிர்காலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.