
மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் இந்த நிகழ்வு கிரம சேவையாளர் சர்வேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவரின் ‘ஒரு கோடி மரம் நடுவோம்’ எனும் எண்ணத்திற்கமைய மரம் நடுகை செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மரக்காரம்பளை கிராம சேவகர் நா. ஸ்ரீதரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், மற்றும் சமூக ஆர்வலகர்கள், சுயாதீன இளைஞர்கள் அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.