கொழும்பு துறைமுக நகரத்தில் சீன பொலிஸார் கடமையில் அமர்த்தப்படுவார்கள் என்ற கருத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை இலங்கை பொலிஸார் மாத்திரமே நிர்வகிப்பர் என்று மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரம் ஒரு சீன காலனியாக இருக்கும் என்றும் அங்கு சீன பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பர் என்று பரவலாக பேசப்பட்டு வரும் கருத்தை நிராகரித்த அஜித் நிவார்ட் கப்ரால், கொழும்பு துறைமுக நகரம் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலம் கொழும்பு துறைமுக நகரத்தை சீன காலனியாக மாற்றாது என்றும் அவர் கூறினார்.
போர்ட் சிட்டி போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணையம் கொழும்பு துறைமுக நகரத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.